×

1000 பயணிகளுக்கு மாற்று ரயில் 4 பேர் பலியான பீகார் ரயில் விபத்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு

பக்சர்: டெல்லி ஆனந்த் விஹார் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமக்யா நோக்கி சென்று கொண்டிருந்த வடகிழக்கு ரயில்வேயின் அதிவிரைவு ரயிலின் 23 பெட்டிகள், பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பயணிகள் பலியாகினர்.

விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த 1006 பேர் நேற்று அதிகாலை 5 மணிக்கு மாற்று ரயில் மூலம் காமக்யா அனுப்பி வைக்கப்பட்டனர். கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பிரேந்திர குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 1000 பயணிகளுக்கு மாற்று ரயில் 4 பேர் பலியான பீகார் ரயில் விபத்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Buxar ,North-East ,Delhi ,Anand Vihar station ,Kamakya ,Assam ,Guwahati ,
× RELATED பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம்...